உலகத்தையே உலுக்கிய நேபாள விமான விபத்து.. கடைசியா விமானத்துல நடந்த விஷயம்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 16, 2023 09:06 PM

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்து, உலக நாடுகள் அனைத்தையும் அதிர வைத்துள்ளது. இந்நிலையில், விமானத்தின் இறுதி நொடிகளை விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

Nepal Plane Crash Yeti Airways flight before it came down

Also Read | "இன்னைக்கு என்னோட விக்கெட்டை நீ எடுத்திருக்கலாம்".. சச்சினின் சவால்.. சீக்ரட்டை உடைத்த முன்னாள் வீரர்.. God of cricket-னா சும்மாவா..?

எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போது தரையிறங்கும் போது ஒரு சில நிமிடங்கள் முன்பாக திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக, தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு உருவானதால் தரையில் மோதி விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அதே போல, அங்கே நிலவிய கால நிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Nepal Plane Crash Yeti Airways flight before it came down

மேலும், இந்த விபத்தில் பலியான 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், விபத்து நடந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட இந்தியர் ஒருவர், விபத்து நடக்க கொஞ்ச நேரம் முன்பு அவர் எடுத்த லைவ் வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகியது.

இந்நிலையில், இந்த விமானத்தின் இறுதி வினாடிகளை காட்டும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மிகவும் தாழ்வாக பறக்கும் அந்த விமானம், திடீரென தீப்பிடிக்கிறது. அதன்பிறகு, காடுகளின்மீது பறந்து கொண்டிருந்த அந்த விமானம் திடீரென காட்டுக்குள் விழுகிறது.

Nepal Plane Crash Yeti Airways flight before it came down

அடுத்த சில வினாடிகளில் அந்த பகுதியில் தீ ஜுவாலைகள் எழ, கரும்புகை அப்பகுதியையே மறைக்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே விமான விபத்து தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

Also Read | "விராட் அடிச்ச அந்த ஒரு அடி".. மிரண்டு பார்த்துட்டு உற்சாகத்தில் ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்!!

Tags : #NEPAL #NEPAL PLANE CRASH #FLIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nepal Plane Crash Yeti Airways flight before it came down | India News.