2023 ல கெளம்பி.. 2022-ல் விமானம் தரை இறங்கியதா?.. பயணிகளுக்கு காத்திருந்த வினோத சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள சூழலில், தற்போது புத்தாண்டான 2023 ஆம் ஆண்டினை உலக அளவில் உள்ள மக்கள் அனைவரும் வெகு விமரிசையாக வரவேற்று கொண்டாடவும் செய்திருந்தனர்.
Also Read | "இப்போ எப்படி பிரச்சனை வருதுன்னு பாக்குறேன்".. TTF வாசனின் புதிய சவால்.. ட்ரெண்டாகும் வீடியோ..!
கடந்த ஆண்டில் இருந்து பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் கண்டு வாழ்வில் இன்னும் ஒரு சிறந்த தருணமாக 2023 ஆம் ஆண்டு இருக்க வேண்டும் என்றும் ஏராளமானோர் எதிர்பார்த்து வருகின்றனர். பல்வேறு ஆவல்களுடன் 2023 ஆம் ஆண்டில் மக்கள் அனைவரும் காலடி எடுத்து வைத்துள்ள சூழலில் ஏறக்குறைய வினோதம் சம்பவம் அரங்கேறி, இது தொடர்பான செய்தியும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
தென் கொரிய நாட்டின் சியோல் பகுதியில் இருந்து அமெரிக்கா நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு விமானம் ஒன்று கிளம்பி உள்ளது. முன்னதாக, இந்த விமானம் தென் கொரியாவில் 2023 ஆம் ஆண்டு பிறந்து 29 நிமிடங்கள் கழித்து சியோல் நகரில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
மேலும் இந்த விமானம், டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பசிபிக் பெருங்கடலை மையமாக வைத்து சர்வதேச நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வருவதால் அந்த கணக்கின்படி ஆசியாவை விட அமெரிக்கா 23 மணி நேரம் பின்தங்கி இருக்கும். அப்படி ஒரு சூழலில், தென் கொரியா நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு விமானம் ஒன்று 2023 ஆம் ஆண்டு கிளம்பி, 2022 ஆம் ஆண்டு சென்று சேர்ந்துள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்த வினோத சம்பவம் குறித்த செய்தி அதிக வைரலாகி வரும் வேளையில், பலரும் இதனை Time Travel என்றும் வேடிக்கையாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Also Read | சிக்ஸ் லைன் உள்ள கேட்ச்?.. அவுட்டா சிக்ஸரா என குழம்பிய ரசிகர்கள்.. உண்மையில் நடந்தது என்ன??