விமானத்தையே வீடா மாத்திட்டாங்க.. அதுவும் நடு காட்டுக்குள்ள.. வசதிகள் எல்லாம் மிரட்டலா இருக்கே..!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானத்தையே தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறது நிறுவனம் ஒன்று. எதேச்சையாக இணையத்தில் ஹோட்டல்களை தேடிய பெண் ஒருவர் இந்த இடத்தை கண்டதும் திகைத்துப்போயிருக்கிறார். இந்நிலையில், தற்போது இந்த விமான விடுதியில் தங்கியிருக்கும் அந்த பெண் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஓய்விடம்
சுற்றுலா செல்வது பலருக்கும் பிடிக்கும். கடலை பார்த்தபடி, நீல வானத்தை ரசித்தபடி ஒரு இடத்தில் தங்கி ஓய்வெடுக்க விருப்பப்படாத நபர்களே இருக்கமாட்டார்கள். ஆனால், விமானத்திலேயே ஒரு விடுதி அமைந்தால்? அப்படியான அனுபவத்தை தான் பெண் ஓருவருக்கு அளித்திருக்கிறது Airbnb நிறுவனம். விடுதிகளை வாடகைக்கு அளிக்கும் சேவையை வழங்கிவரும் இந்நிறுவனத்தின் மூலமாக Abbi என்னும் பெண் இந்த விமான விடுதியை கண்டுபிடித்திருக்கிறார்.
Credit: tiktok/abbsolutely
விமான விடுதி
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ளது கோஸ்டாரிக்கா நாடு. கடல்கள், மழைக் காடுகள் என சுற்றுலா வாசிகளின் சொர்க்கபுரியாக திகழும் இந்த நாட்டுக்கு சுற்றுலா கிளம்பிய Abbi, தங்குவதற்கு இடத்தை தேடியிருக்கிறார். அப்போதுதான் இந்த விமான விடுதி பற்றி அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போன அவர் உடனடியாக இந்த விடுதியை புக் செய்திருக்கிறார்.
Credit: tiktok/abbsolutely
கோஸ்டாரிக்காவின் மானுவல் அன்டோனியோ தேசிய பூங்கா பகுதி அடர்ந்த மழைக் காடுகளை கொண்டது. இதன் நடுவே போயிங் 727 விமானத்தை விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். இதுபற்றி தனது டிக்டாக் பக்கத்தில் அவர்,"முழு உலகிலும் சிறந்த Airbnb விடுதி இதுதான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Credit: tiktok/abbsolutely
அலாதியான அனுபவம்
இதனை மெய்ப்பிக்கும் விதமாக இந்த விமானத்தினுள் அமைந்துள்ள பல்வேறு வசதிகளையும் அவர் வீடியோவாக வெளியிட சமூக வலை தளங்களில் இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சர்யமடைந்திருக்கின்றனர். இரண்டு படுக்கை அறைகள், இரண்டு கழிவறை மற்றும் குளியறைகள் இதனுள் அமைந்துள்ளன. உள்ளே சமையல் அறையும் இருக்கிறது.
Credit: tiktok/abbsolutely
பகல் நேரங்களில் குட்டித் தூக்கம் போட ஏற்றவாறு வசதியான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விமானத்தின் இறக்கைகளை பால்கனியாக மாற்றியிருக்கிறார்கள். இதில் நின்று தூரத்தில் தெரியும் கடலையும், இயற்கை சூழ்ந்த வனப்பகுதிகளையும் காண்பது அலாதியான அனுபவம் என்கிறார் இந்த அதிர்ஷ்டசாலி பெண். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
