கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.. 12,000 அடி உயரத்தில் நடந்த பரபரப்பு.. கண்ணீர்விட்ட விமான பணிப்பெண்.. கடைசியில் நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 17, 2022 06:57 PM

கோவாவில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் திடீரென கரும்புகை எழுந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளான சம்பவத்தில் DGCA நடவடிக்கையை துவங்கியுள்ளது.

Goa to Hyderabad flight filled with smoke landed safely video

Also Read | மூழ்கிப்போன டைட்டானிக் கப்பலை பார்க்கணும்.. 30 வருஷமா காத்திருந்த பெண்.. படிச்சது, சம்பாதிச்சது எல்லாம் அதுக்காக தான்.. மிரளவைக்கும் பின்னணி..!

கடந்த 12 ஆம் தேதி இரவு கோவாவில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் Q400 ரக விமானம். இரவு 11 மணிக்கு கிளம்பிய இந்த விமானத்தில் விமான பணியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 86 பேர் பயணித்திருக்கின்றனர். அப்போது, விமானத்தின் உள்ளே திடீரென கரும்புகை எழும்பியிருக்கிறது. இதனால் பயணிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். விமானத்தின் நடைபாதை முழுவதும் கரும்புகை சூழ, பயணிகள் என்ன செய்தவென்றே தெரியாமல் பீதியுடன் தங்களது இருக்கையில் அமர்ந்திருந்திருக்கின்றனர்.

Goa to Hyderabad flight filled with smoke landed safely video

இதனையடுத்து கரும்புகையுடன் அடுத்த 25 நிமிடங்கள் பயணித்த விமானம் பத்திரமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கிறது. அவசர வழி மூலமாக பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயணி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விமானம் முழுவதும் புகையால் நிரம்பியிருப்பது புலனாகிறது. மேலும் அவர் எழுதிய பதிவில், கோவாவில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கரும்புகை ஏற்பட்டதாகவும் பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதாகவும்  அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், விமானத்தில் கரும்புகை கிளம்பிய உடனே அச்சமடைந்த பயணிகள் கடவுளை வேண்டிக்கொண்டே பயணித்திருக்கிறார்கள். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, இதுகுறித்த விசாரணையில் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் இறங்கியது. அதன்படி ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை ஆயில் மாதிரி பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது DGCA. ஆயில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கனடாவில் உள்ள பிராட் & விட்னி அமைப்புக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | புதுசா வாங்குன பைக்-கு மாலையை போடுங்க.. டக்குன்னு கணவர் செஞ்ச காரியம்.. எல்லோரும் சிரிச்சிட்டாங்க.. Cute வீடியோ..!

Tags : #FLIGHT #GOA #HYDERABAD #SMOKE #PASSENGERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Goa to Hyderabad flight filled with smoke landed safely video | India News.