“மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல..!!”.. அத்தனை சொந்த பந்தங்களையும் விமானத்துல கூட்டிட்டுப்போன மணமக்கள்.. நெகிழ்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம் ஜோடி ஒன்று தங்களது திருமணத்திற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வரன் பார்ப்பதில் துவங்கும் பரபரப்பு திருமண நாள் வரையிலும் கூட நீடிப்பதுண்டு. வாழ்வின் முக்கிய தினமாக மக்கள் திருமணத்தினை கொண்டாடுகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் திருமணங்களுக்கு என செலவழிக்கும் தொகை அபரிமிதமானதாக இருக்கும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கான திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதை தங்களது கனவாகவே கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இளம் தம்பதி ஒன்று தங்களது திருமணத்திற்கு உறவினர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. ஷ்ரேயா ஷா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் தனது சகோதரிக்கு திருமணம் என்பதால் ஒட்டுமொத்த விமானத்தையும் உறவினர்களுக்காக புக் செய்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார் அவர்.
ஷ்ரேயாவின் சகோதரியுடைய திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மார் பகுதியில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்ட இந்த ஜோடி, இதற்காக முழு விமானத்தையும் புக் செய்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் விமானத்தின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் மக்கள் கைகளை உற்சாகமாக அசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இறுதியில் மணமக்கள் புன்னகைத்தவாறு அமர்ந்திருக்கின்றனர். இப்படி விமானம் முழுவதும் நிறைந்திருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆராவாரம் செய்யும் இந்த வீடியோவை இதுவரையில் 12 மில்லியன் மக்கள் பார்த்திருக்கின்றனர். மேலும் நெட்டிசன்கள் இந்த வீடியோவில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருவதுடன் இந்த வித்தியாசமான முயற்சி குறித்து தங்களது கருத்துக்களை கமெண்ட் ஆக பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
