நேபாளத்தில் வாலிபால் விளையாட சென்ற தமிழக வீரருக்கு நேர்ந்த சோகம்.. இறுதி சடங்கில் ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேபாள நாட்டில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வாலிபால் வீரரின் உடல் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
Also Read | "நானா கொரோனாவான்னு ஒரு கை பாத்துடறேன்".. Couple Goal ஐடியா.. Viral வீடியோ..!
திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு தாசன். இவருடைய மகன் ஆகாஷ். 27 வயதான இவர் சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேபாள நாட்டின் போக்ரா நகரத்தில் உள்ள ரங்கசாலா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆகாஷ் சென்றிருந்தார். கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெற்ற வாலிபால் போட்டியின் போது காலை 11 மணிக்கு முதல் சுற்றில் விளையாடிய பின்னர் ஓய்வு அறைக்கு ஆகாஷ் சென்றிருக்கிறார்.
அப்போது ஓய்வு அறையிலேயே அவர் வாந்தி எடுத்து, மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். அப்போது அங்கு சென்ற வீரர்கள் ஆகாஷை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஆகாஷை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் அங்கிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
இதனையடுத்து அவருடைய உடலை தமிழகத்திற்கு எடுத்துச்செல்லும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பலனாக ஆகாஷின் உடல் ஏர் இந்தியா விமானம் மூலமாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கே, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஞ்சலி வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் ஆகாஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, ஆகாஷின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இறுதி சடங்கு நடைபெற்றது. பின்னர், ஆகாஷின் உடல் வாலிபாலுடன் அடக்கம் செய்யப்பட்டது. மிகப்பெரிய வாலிபால் பிளேயராக வரவேண்டும் என கனவுகளுடன் இருந்த ஆகாஷ் திடீரென மரணமடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | Long Drive போலாமா? பொண்டாட்டியை நடுக்காட்டில் மறந்து விட்டுவிட்டு 150 கிமீ போன கஜினிகாந்த்.! யாருயா அவரு.?!