"கைநீட்டி கத்தாதீங்க, உங்க வேலைக்காரி இல்ல நான்".. நடுவானில் நடந்த சண்டை.. ஆவேசமான விமான பணிப்பெண்!!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானத்தில் பயணி ஒருவருக்கும், ஊழியருக்கு நடந்த சண்டை தொடர்பான வீடியோ, தற்போது உலக அளவில் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

அவ்வப்போது இணையத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிறைய விஷயங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் பேசுபொருளாக மாறும்.
அதிலும் விமானத்திற்குள் நிகழும் சம்பவங்களுக்கும் மிக முக்கிய பங்குண்டு. இந்த நிலையில், தற்போது விமானத்திற்குள் நடந்த பரபரப்பு சம்பவம் குறித்த செய்தி தான், அதிக வைரலாகி வருகிறது.
இஸ்தான்புல் முதல் டெல்லி வரையில் பறந்த விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட பயணிக்கும் அதில் பெண் விமான ஊழியர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது. உணவை தேர்வு செய்வதில் அந்த பயணி ஏதோ கை நீட்டி பேசியதாக தகவல் தெரிவிக்க, அதன் காரணமாக கோபமடைந்த அந்த பெண் விமான ஊழியரோ, "நான் ஒன்றும் உங்களது வேலைக்காரி கிடையாது. இந்த விமானத்தின் ஊழியர் தான். எங்களைப் பார்த்து நீங்கள் கைநீட்டி கத்தவும் முடியாது" என ஆவேசமாக பேசி கடுமையான வாக்குவாதத்திலும் அந்த பயணியுடன் ஈடுபடுகிறார்.
அந்த பயணி மற்றும் விமான ஊழியர்கள் இருவரையும் சமாதானப்படுத்த மற்ற விமான ஊழியர்களும் அங்கிருந்து பயணிகள் சிலரும் முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவை பெரிய அளவில் பலனளிக்காமல் செல்ல ஒரு சில நிமிடங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
விமானத்தில் பயணம் செய்த சக பயணி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிக வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் விமான பணிப்பெண் குறித்தும் அந்த அதில் பயணம் செய்த பயணியின் உணவு விருப்பங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே போல ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ் கபூர் கூட, விமான பணிப்பெண்களும் சாதாரண மனிதர்கள் தான் என்றும் விமான பணிப்பெண்களை பலர் வேலைக்காரிகளை போல நடத்துவதை நானே பார்த்துள்ளேன் என்றும் அந்த விமான ஊழியருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
