விமான TOILET -ல் சிகரெட் பிடித்த நபர்.. பகீர்னு அடிச்ச அலாரம் .. பதட்டமாகி மனுஷன் செஞ்ச காரியம்..
முகப்பு > செய்திகள் > உலகம்விமானத்தில் புகைப்பிடித்த பயணி ஒருவர் தவறுதலாக சிகரெட்டை அருகில் இருந்த குப்பை கூடையில் வீச, தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், விமான பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்க்கு பெரும் தீங்குகளை விளைவிக்கக்கூடியது. புகைப்பவர் மட்டும் அல்லாது அருகில் இருப்பவர்களையும் இது ஆபத்தில் தள்ளிவிடும். அப்படியிருக்க, விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் புகைப்பிடிக்க மொத்த பயணிகளும் அதிர்ந்து போய்விட்டனர். அண்மையில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து பாங்காக்-ற்கு ஒரு விமானம் கிளம்பியிருக்கிறது.
இதில் பயணித்த ஒருவர், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, கழிவறைக்கு சென்றிருக்கிறார். அவர், உள்ளே புகைப்பிடிக்க துவங்கியவுடன் அலாரம் அடிக்க துவங்கியிருக்கிறது. இதனால் பதட்டமடைந்த அந்த பயணி சிகரெட்டை அருகில் இருந்த குப்பை கூடையில் வீசியிருக்கிறார். ஆனால், அதில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிய துவங்கவே என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப்போயிருக்கிறார் அவர்.
இதனிடையே அலார சத்தத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். இருப்பினும், விமான பணியாளர்கள் நடந்ததை அறிந்து, தீயணைக்கும் கருவி மூலமாக கழிவரையில் ஏற்பட்ட தீயை உடனடியாக அணைத்திருக்கின்றனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இயக்கப்பட்ட விமானம் பத்திரமாக பாங்காக்கில் தரையிறங்கியிருக்கிறது.
இந்த விபத்தினால் கழிவறையில் இருந்த சில பொருட்கள் தீயில் கருகியிருப்பதாகவும், வேறு அச்சம் கொள்ளத்தக்க வகையில் ஏதும் பாதிப்பில்லை என விமான அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், விமான கழிவரையில் ரயில் விட்ட நபர் இஸ்ரேல் திரும்பிய பிறகு அவர்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள்,"இந்த சம்பவத்திற்கு பிறகு விமானம் திட்டமிட்டபடி பயணத்தை தொடர்ந்தது. பாங்காக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதுகுறித்து பயணி எச்சரிக்கப்பட்டிருக்கிறார். மேலும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த சட்ட பிரிவுக்கு இந்த விவகாரத்தை தெரியப்படுத்தியுள்ளோம்" என்றனர்.