முதல் முறையாக விமானத்தில் ஏறிய தம்பதி.. பின்னாடி இருந்த பயணி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமூக வலைத்தளங்களில் நாம் அதிக நேரம் உலா வரும்போது, நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Also Read | Video : "கயல்விழியிடம் செலவுக்கு பணம் கேட்டா பதில் இப்படிதான் வரும்"... போட்டு உடைத்த சீமான் 😍 Exclusive
அப்படி சில நிஜ சம்பவங்கள் குறித்து நாம் தெரிய வரும் போதும் அவை மனதுக்கு மிக மிக நெருக்கமாகவும் அதே வகையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் இருக்கும்.
அந்த வகையில் விமானத்தில் முதன் முதலாக ஏறிய ஒரு தம்பதிக்கு சக பயணி ஒருவர் செய்த உதவி தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.
இது தொடர்பாக அமிதாப் ஷா என்ற நபர் ஒருவர் தனது லிங்க்டு இன் பக்கத்தில் தான் விமான பயணத்தில் சந்தித்த தம்பதி குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதிலுள்ள தகவலின் படி, டெல்லி விமான நிலையத்திலிருந்து கான்பூருக்கு விமானம் ஏறி உள்ளார் அமிதாப். அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்திலிருந்து சுமார் 8 மணி நேரம் பஸ் பயணம் செய்து அந்த விமானத்தில் ஒரு தம்பதி ஏறி உள்ளனர். விமான நிலையத்துக்குள் வந்தது முதலே அவர்கள் எதுவும் தெரியாத வகையில், ஆங்கிலமும் புரியாத வகையில் மிகவும் குழப்பத்துடன் நடந்து கொண்டதையும் அமிதாப் கவனித்துள்ளார்.
தொடர்ந்து அந்த தம்பதிகளுக்கு உதவியும் செய்து அவர்களை விமானத்தில் அழைத்து வந்துள்ளார் அமிதாப். மேலும் விமானத்தில் ஏறிய பிறகு அந்த பெண் அமிதாப் ஷாவிடம் தங்களது புகைப்படத்தை எடுத்து மகளின் whatsapp எண்ணிற்கு அனுப்ப முடியுமா என்று கேட்டுள்ளார். தாங்கள் பத்திரமாக இருப்பதை உணர்த்துவதற்காக இதை அந்த பெண் செய்யச் சொன்ன நிலையில் அதனை அமிதாப்பும் அவர்களின் புகைப்படம் எடுத்து மகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அங்கே கட்டணம் செலுத்தி அந்த தம்பதிக்கு உணவையும் வாங்கிக் கொடுத்துள்ளார் அமிதாப். தொடர்ந்து விமானத்தில் இறங்கி சொந்த வழியில் செல்லும் போது அவர்கள் அமிதாப்பை பார்த்து புன்னகைத்ததையும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறை விமானத்தில் ஏறிய தம்பதியருக்கு அதிலிருந்து சக பயணி ஒருவர் உதவி செய்த தொடர்பான செய்தி தற்போது நெட்டிசன்கள் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
