"தனா-க்கு ஒரு பிரச்சனைன்னா பொங்கிருவேன் நானு".. ஜாலியா ஆவேசமான DD.. "பிரச்சனை பண்றதே தனாவா இருந்தா? 😅"

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 16, 2023 07:21 PM

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

DD about Dhanalakshmi in bigg boss house fun moments

Also Read | "விராட் அடிச்ச அந்த ஒரு அடி".. மிரண்டு பார்த்துட்டு உற்சாகத்தில் ரோஹித் கொடுத்த ரியாக்ஷன்!!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.

இதற்கு காரணம், முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளது தான். ஜிபி முத்து, ராபர்ட், தனலட்சுமி, ராம், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது.

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்று டாஸ்க்காக கொடுக்கப்பட்டிருந்தது.

DD about Dhanalakshmi in bigg boss house fun moments

உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டில் லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் அணிந்து வலம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து முந்தைய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குகளும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட அதன் காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது.

இப்படியாக கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில் கமல்ஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றி போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விஷயங்களையும் உரையாடி இருந்தார். இதற்கடுத்து ADK-வும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி DD, பிரியங்கா, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

DD about Dhanalakshmi in bigg boss house fun moments

இதில் அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் கலகலப்பாக DD உரையாடி இருந்தது, பிக் பாஸ் வீட்டில் ஒரு பாசிட்டிவ் தருணமாகவும் அமைந்திருந்தது.

அதே போல, விக்ரமன், அசிம் உள்ளிட்ட இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள அனைத்து போட்டியாளர்கள் குறித்தும் தனியாக கலந்துரையாடி, அவர்களின் விளையாட்டு திறன் பற்றியும் சிறப்பாக பேசி இருந்தார் DD. இதனிடையே, தனலட்சுமி குறித்து பிக் பாஸ் வீட்டில் நிறைய ஜாலியான கருத்துக்களையும் DD தெரிவித்திருந்தார்.

DD about Dhanalakshmi in bigg boss house fun moments

சக போட்டியாளர்கள் சுற்றி இருக்கும் போது தனாவிடம் பேசும் DD "தனா ஏதாவது பிராப்ளமா?. நான் பேசலாமா?. ஒரு பிரச்சனையும் இல்லைல்ல. தனாவுக்கு ஒரு பிரச்சனைன்னா பொங்கி எழுந்துருவேன் நானு" என கூறினார். இதனைக் கேட்டதும், "பிரச்சனை பண்றதே தனாவா இருந்தா?" என அசல் கோலார் கூறினார். இதற்கு பதில் சொல்லும் DD, "அதுனால தான் அவ சைடு போய்ட்டேன் நானு" என் கூறியதும் அங்கிருந்த அனைவரும் சிரிக்கவும் தொடங்கி விட்டனர். இதன் பின்னர் கூட, ஒரு சில முறை, தனாவுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்றும் கேட்டுக் கொண்டே இருந்தார் DD.

DD about Dhanalakshmi in bigg boss house fun moments

அது மட்டுமில்லாமல், "தனாவுக்கு ஒண்ணுன்னா தாங்கிக்க முடியாது என்னால" என்றும் DD கூறி வந்தார். இது தவிர, தனாவுக்கு வெளியே இருக்கும் ரசிகர்கள் குறித்தும் தனா ஆவேசமாகவும் அதே வேளையில், மறுபக்கம் ஜாலியாகவும் என இரண்டு முகங்கள் இருப்பதாகவும் DD விளக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'சிக்ஸ்' அடிச்சதும் தோனி பெயரை சொல்லி கத்திய கோலி.. "அடேங்கப்பா, இதுக்காக தானா?"..

Tags : #DD #DHANALAKSHMI #DHIVYADHARSHINI #BIGG BOSS HOUSE #BIGG BOSS TAMIL 6 #BIGG BOSS 6 TAMIL #VIJAY TV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. DD about Dhanalakshmi in bigg boss house fun moments | Tamil Nadu News.