‘இனி வெறும் 99 ரூபாய் தான்’.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடி அறிவிப்பால்’.. உற்சாகத்தில் பயனாளர்கள்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 13, 2019 01:11 PM
ஆப்பிள் நிறுவனம் வீடியோ ஸ்ட்ரீமிங் துறையில் புதிதாக ஆப்பிள் டிவி ப்ளஸை அறிமுகப்படுத்த உள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் போன்ற பிரபலமான தளங்களுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் டிவி ப்ளஸை களமிறக்கியுள்ளது. இந்த தளத்தில் அதிகப்படியாக ஒரிஜினல் தயாரிப்புகளை வெளியிட உள்ள ஆப்பிள் நிறுவனம் இந்த சேவையை மாதம் 99 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சேவையை ஆப்பிள் சாதனங்களில் மட்டுமில்லாமல் அமேசான் ஃபயர் டிவி, சாம்சங் மற்றும் சோனி ஆகிய சாதனங்களிலும் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி அறிமுகமாக உள்ள ஆப்பிள் டிவி ப்ளஸ் மற்ற தளங்களை விட குறைந்த விலைக்கு வழங்கப்படுவதால் பயனாளர்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஆப்பிள் ப்ளஸ் உடன் ஆப்பிள் ஆர்கேட் என்ற கேமிங் தளத்தையும் அறிமுகம் செய்ய உள்ளது.