' அடக்கம் பண்ண காசு இல்ல'...'பர்சில் இருந்த பணத்தை கொடுத்த 'டிஸ்பி'...நெகிழவைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 13, 2019 03:43 PM

கொலை செய்யப்பட்டவரை அடக்கம் செய்ய காசு இல்லாமல் தவித்தவர்களுக்கு துணைக் கண்காணிப்பாளர் உதவிய சம்பவம் பலரையும் நெகிழச்செய்துள்ளது.

DSP helps money for funeral in Vedaranyam

நாகை மாவட்டம் அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்த செந்தில் என்பவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக அவரது அண்ணன் முறையான ரவி என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் செந்திலின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.  உப்பளத்தில் கூலித் தொழிலாளியாக இருந்த செந்திலுக்கு பெரிய அளவில் வருமானம் ஒன்றும் இல்லை. இந்த சூழ்நிலையில் செந்திலின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் பணம் இல்லாமல் தவித்தனர். அப்போது உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு வந்திருந்த வேதாரண்யம் டி.எஸ்.பி சபியுல்லா, தனது பர்சில் வைத்திருந்த பணத்தை கொடுத்து சடலத்தை அடக்கம் செய்ய உதவிசெய்தார்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. டி.எஸ்.பி சபியுல்லாவின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

Tags : #TAMILNADUPOLICE #VEDARANYAM #DSP #FUNERAL