‘அம்மாவோட நினைவுத் தினம்’... ‘1,500 பேருக்கு ஒரே நேரத்தில் ஆசையாக’... ‘விருந்து வைத்த இளைஞர்’... ‘கடைசியில் நேர்ந்த துயரம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 05, 2020 01:25 AM

மத்தியப்பிரதேசத்தில் விழிப்புணர்வு இன்றி செயல்பட்டதால் 1,500 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Controversy youth who arranged a feast for late Mother tests positive

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான சுரேஷ், துபாயில் ஹோட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக பலரும் சொந்த நாடுகளுக்குத் திரும்பியதால் சுரேஷும் துபாயிலிருந்து கடந்த மாதம் 17-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலம் மோரினாவுக்கு தனது மனைவியுடன் வந்துள்ளார். சுரேஷின் தாயாருக்கு மார்ச் 20-ம் தேதி நினைவுநாள் என்பதால், தாயாரை கௌரவிப்பதறற்காக அன்று 1,500 பேருக்கு ஒரே நேரத்தில் உணவு வழங்க ஏற்பாடு செய்து அனைவரும் சாப்பிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், மார்ச் 25-ம் தேதி சுரேஷுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது. ஆனால் அவர் 4 நாட்கள் கழித்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதையடுத்து அவருடைய மனைவிக்கும் சோதனை செய்யப்பட்டது. பின்னர் நடத்திய சோதனையில் கடந்த 2-ம் தேதி இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கடந்த 20 தினங்களில் யாரையெல்லாம் தொடர்புகொண்டார் என்பதை விசாரித்தபோதுதான், ஒரே நாளில் 1,500 பேர் கூடி விருந்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சுரேஷின் நெருங்கிய உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. 23 பேருக்கு நடந்த சோதனையில், 8 பெண்கள் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மற்ற 13 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். சுரேஷ் கொடுத்த விருந்தில் கலந்துகொண்ட எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அரசு கலக்கத்துடன் அறிவிப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தின் உயர் மருத்துவ அலுவலர் ஒருவர் கூறுகையில், `சுரேஷ் துபாயிலிருந்து கிளம்பும்போது அவருக்குக் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. அவருடைய மனைவிக்கு தான் அங்கிருந்து கிளம்பும்போதே காய்ச்சல் இருந்துள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் 1,500 பேருக்கு விருந்து கொடுத்தது மிகவும் தவறானது. மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டுதான் வருகிறோம். மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காதவரை கொரோனாவை நாட்டிலிருந்து விரட்ட முடியாது’ என்று கவலையுடன் தெரிவித்துள்ளார். தற்போது அந்த காலனிக்கே சீல் வைக்கப்பட்டுள்ளது.