‘கொரோனா’ இருக்குன்னு வேணும்னே இத பண்ணீங்கனா 1 வருஷம் சிறை தண்டனை.. இங்கிலாந்து போலீசார் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Apr 02, 2020 05:49 PM

கொரோனா பாதிப்பு இருக்கிறது எனக் கூறி வேண்டுமென்றே தும்மினால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என இங்கிலாந்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Coronavirus cough is now crime, punishable by 1 year prison in UK

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு சிலர் கொரோனா தொற்று இருப்பதாக கூறி பிறர் முன் இருமி அச்சுறுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இது காவல்துறையினர், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைக்காரர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் அவசரகால பணிகளை மேற்கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் குற்றம் என அந்நாட்டு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கிரவுன் பாதுகாப்பு சேவை வெளியிட்ட அறிவிப்பில், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் 12 மாதங்கள் வரை சிறை தண்டனை பெறக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும்  ‘கொரோனா வைஸை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்திருக்கும் சூழலில் அவசரகால பணிகளை மேற்கொள்பவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். ஆனால் காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் முன் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி சிலர் வேண்டுமென்றே இருமுவது அதிர்ச்சி அளிக்கிறது’ என அந்நாட்டு பொது குற்றத்தடுப்பு இயக்குநர் மேக்ஸ் ஹில் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #CORONAVIRUS #CRIME #CORONAVIRUSCOUGH