777 Charlie Trailer

"பொண்டாட்டி தொல்லையிலிருந்து விடுபட.. மரத்தை சுற்றி பரிகாரம் செய்யும் கணவர்கள்".. இது புதுசா இருக்கே..எங்கப்பா இது?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jun 14, 2022 07:01 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டில் தாங்கள் சந்திக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபட, கல்யாணம் ஆன ஆண்கள் அங்குள்ள அரச மரம் ஒன்றை சுற்றி பரிகாரம் செய்கிறார்கள். இது இந்தியா முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Men aggrieved with wives worship peepal tree

Also Read | "இதை திறக்கறவங்களுக்கு சாபம் விட்ருவாரு".. ரகசிய கல்லறையில் இருந்த எச்சரிக்கை பலகை.. நடுங்கிப்போன ஆராய்ச்சியாளர்கள்..!

பொதுவாக திருமண தடைகள் நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, வீட்டில் நல்ல காரியங்கள் நடைபெற கோவிலில் உள்ள மரங்களை சுற்றி மக்கள் பரிகாரம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆஸ்ரமம் ஒன்றில் திருமணமான ஆண்கள் வினோத பரிகாரம் ஒன்றை செய்கிறார்கள். இதன்மூலம் தங்களது வீட்டில் ஏற்படும் சிக்கல்கள் தீரும் என நம்புகிறார்கள் அவர்கள்.

தொல்லைகளில் இருந்து விடுபட

மகாராஷ்டிரா  மாநிலத்தின் அவுரங்காபாத்தில் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சேர்ந்து ஒரு ஆஸ்ரமத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த ஆஸ்ரமத்தில் ஒரு அரசமரம் இருக்கிறது. இங்கே, ஆண்கள் வீட்டில் தங்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என கோஷமிட்டபடி இங்குள்ள அரச மரத்தை சுற்றிவந்தனர். இந்த வினோத போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும், தற்போது உள்ள மனைவியே அடுத்த ஜென்மத்திலும் மனைவியாக வரக்கூடாது என வேண்டிக்கொண்டு இந்த மரத்தை சுற்றினால் தக்க பலன்கிட்டும் எனவும் நம்புகிறார்கள் இங்குவரும் சில கணவன்மார்கள்.

7 ஜென்மம்

இந்நிலையில் 'வத் பூர்ணிமா' என்னும் சடங்கில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இந்த ஜென்மத்தில் தங்களுக்கு கணவராக இருப்பவரே 7 ஜென்மத்திற்கும்  கணவராக வரவேண்டும் எனவும் தங்களது இல்லற வாழ்க்கை சிறக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு ஆலமரத்தை சுற்றி வழிபாடு நடத்துவது அங்கு பிரசித்தி பெற்றதாகும். இந்த வைபவம் இன்று நடைபெற்றிருக்கிறது.

Men aggrieved with wives worship peepal tree

நேற்று, வீட்டில் தங்களுக்கு அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கணவர்கள் பூஜை நடத்தி ஆஸ்ரமத்தில் உள்ள அரச மரத்தை 108 முறை சுற்றி வந்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய இந்த ஆஸ்ரமத்தின் தலைவர் பாரத் ஃபுலாரே,"பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அவையும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, ஆண்கள் எதிர்கொள்ளும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பும் வகையில் சட்டங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் இந்த போராட்டத்தை நடத்தினோம்" என்றார்.

Also Read | 15 வருஷத்துக்கு முன்னாடி மரணமடைந்த கணவருடைய குரலை கேட்க, தினமும் சுரங்க ரயில் நிலையத்துக்கு செல்லும் மனைவி.. உருகவைக்கும் காதல்..!

Tags : #PEEPAL TREE #MEN #WIVES #WORSHIP #WORSHIP PEEPAL TREE #கணவர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Men aggrieved with wives worship peepal tree | India News.