ஆபரேஷன் ஆட்டோ.. சீட்டுக்கடியில் பல லட்சம் ரூபாய் போலி நோட்டுகள்.. சென்னையை அலறவிட்ட கலர்பிரிண்ட் ஆசாமிகள்..!பிடிபட்டது எப்படி?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட முயற்சித்த கும்பலை சென்னை காவல்துறை கைது செய்திருக்கிறது.
Also Read | ஆறுதல் சொல்ல வந்தது குத்தமா? காத்திருந்த அடுத்த அதிர்ச்சி.. குமரியில் நடந்த பேக் டு பேக் கொள்ளை..
நஷ்டம்
சென்னையை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்திருக்கிறார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அதே பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்துவந்த போது தனது நண்பரான ரசூல் என்பவரிடத்தில் தனது கஷ்டத்தினை கூறியிருக்கிறார். அப்போது ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என யுவராஜிடம் கூறியுள்ளார் ரசூல். மேலும், 11 லட்சம் கொடுத்தால் 60 லட்சம் ரூபாய் தருவதாகவும் ரசூல் சொல்ல, அதனை நம்பி யுவராஜ் 11 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
தனி வீடு
இதனை அடுத்து, சென்னையை சேர்ந்த பிரபாகரன், இம்தியாஸ், ஜான் ஜோசப், ரசூல்கான், முபாரக் ஆகியோருடன் இணைந்து யுவராஜ் ரூபாய் நோட்டு பிரிண்ட் எடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இதற்காக மணலி புதுநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து ரகசியமாக தங்களது திட்டத்தினை செயல்படுத்தி வந்திருக்கிறது இந்த கும்பல்.
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் ரகசிய ஆப்பரேஷன் நடைபெறும் வீட்டிற்கு வந்த யுவராஜ் தன்னிடம் தருவதாக கூறிய 60 லட்சம் ரூபாயை கொடுக்கவில்லை என ரசூலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், 200 ரூபாய்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் செய்யும்படியும் யுவராஜ் கூற இதனால் கும்பலுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
சண்டை
இதனால் பலத்த சத்தம் ஏற்படவே, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்திருக்கின்றனர். இதனை அடுத்து அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் ஆறு பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களில் மூன்று பேரை காவலில் எடுத்து விசாரித்தனர் அதிகாரிகள்.
அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆட்டோ ஒன்றின் சீட்டுக்கு அடியில் பணத்தினை பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் கூறியதை அடுத்து, துரிதமாக ஆக்ஷனில் இறங்கினர் அதிகாரிகள். இதனையடுத்து கைதானவர்கள் கூறிய ஆட்டோவில் இருந்த 30 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
சென்னையில் ரூபாய் நோட்டுக்களை கலர் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட முயற்சித்த கும்பலிடம் இருந்து 30 லட்ச ரூபாய் போலி நோட்டுக்களை காவல்துறை கைப்பற்றியுள்ள சம்பவம் மணலி பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8