இனி வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு சொன்னா ரெண்டு யோசிப்பாங்க போலயே.. RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 18, 2022 02:10 PM

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்கள் தங்கள் மனைவியை கைவிடுவது அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Foreign grooms abandoning their wives, RTI gives data

‘தல’ தோனியே கேப்டனா இருந்தா கூட அந்த டீமால சாம்பியன் ஆக முடியாது.. என்ன இப்படி சொல்லிட்டாரு.. சர்ச்சையை கிளப்பிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்..!

கேரளாவை சேர்ந்தவர் சமூக ஆர்வலரான கோவிந்தன் நம்பூதிரி. இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டில் தங்கள் கணவர்களால் கைவிட பட்டுள்ள மனைவிகள் குறித்த தகவல்களை கேட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 2156 இந்திய பெண்கள் வெளிநாட்டில் தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டிருப்பதும், இதுதொடர்பான வழக்குகள் நடைபெற்று வருவதும் தெரிய வந்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் (USA) 615 வழக்குகளும், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) 586 வழக்குகளும், சிங்கப்பூரில் 237 வழக்குகளும், சவுதி அரேபியாவில் 119 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் குவைத்தில் 111 வழக்குகளும், இங்கிலாந்தில் 104 வழக்குகளும், ஆஸ்திரேலியாவில் 102 வழக்குகளும், கனடாவில் 92 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மனைவிகளுக்கு, இந்திய சமுதாய நல நிதி சார்பில் இந்திய தூதரங்கள் மூலம் 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதி சென்றடையவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

இந்த ஊழியர்களுக்கு எல்லாம் அடிக்கப்போகுது ‘செம’ ஜாக்பாட்.. 6 வருசத்துல இல்லாத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம்? ஆய்வில் தகவல்..!

Tags : #FOREIGN GROOMS #WIVES #RTI #வெளிநாட்டு மாப்பிள்ளை #கணவர் #மனைவி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Foreign grooms abandoning their wives, RTI gives data | India News.