“மிச்சத்த அங்க பேசலாம் வாங்க!”.. ‘மயக்கும்படி பேசி.. சொகுசு ஹோட்டலுக்கு வர சொன்ன இளம்பெண்’.. நம்பி போன இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் இளைஞர் ஒருவரை ஹோட்டலுக்கு வரவழைத்த இளம்பெண், தனது கும்பலுடன் சேர்ந்து அவரிடம் பணம், செல்போன், காரை கொள்ளையடித்துள்ளார்.

முவட்டுபுழா என்கிற ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம், கேரளா கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஆர்யா என்பவர், பேசியே மயக்கி சில தினங்களுக்கு முன்னரான, ஒரு இரவில், சொகுசு ஹோட்டலுக்கு வரவழைத்தார்.
அந்த பெண்ணை நம்பி அங்கு போன அந்த இளைஞர் அதிர்ந்துள்ளார். காரணம், அங்கு முகமது யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் என 4 பேரும் இளம்பெண் ஆர்யாவுடன் இருந்துள்ளனர். அந்த இளைஞனை கட்டாயப்படுத்திய அந்த 4 பேரும் இளைஞனை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததுடன், புகைப்படம் வெளியில் கசியாமல் இருக்க ரூபாய் மூன்றரை லட்சம் கேட்டு மிரட்டினர்.
ஆனால் அந்த இளைஞனோ, அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என கூறிய நிலையில் அவரது கார், மொபைல் போன், ஏடிஎம் கார்டை அந்த கும்பல் திருடியதுடன், அந்த இளைஞனையும் காரில் ஏற்றி கொண்டு இரவு முழுவதும் சுற்றி, அவரது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 35,000 பணத்தை எடுத்துள்ளது.
பின்னர் ஒரு வழியாக சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறி இறங்கிய அந்த இளைஞன் காரில் இருந்து இறங்கியதும், தன்னை காப்பாற்றுமாறு கத்த, அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்ததுடன் இதில் தொடர்புடைய மேலும் 4 பேரைதேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
