'கேஸ் சிலிண்டர்' விநியோகிக்கும் ஊழியர்களுக்கு 'பாத பூஜை'... 'மஞ்சள் நீரால்' கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு 'நன்றி'... 'உரிமையாளர்' செய்த 'வியக்க வைக்கும்' செயல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 03, 2020 09:33 PM

சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லக்கூடிய ஊழியர்களை கடவுளாக நிறுவனத்தின் உரிமையாளரே ஊழியர்களுக்கு பாத பூஜை செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

owner of the company who worship cylinder supply employees

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், தனியார் கியாஸ் நிறுவனம் ஒன்றில், ஏராளமான ஊழியர்கள் இந்த நெருக்கடி நிலையிலும், சிலிண்டரை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றனர்.

அவர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைக் கண்டு நெகிழ்ந்து போன கேஸ் நிறுவன உரிமையாளர், ஊழியர்களை கடவுளாக நினைத்து அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஊழியர்களின் பாதங்களை மஞ்சள் நீரால் கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு, பூ போட்டு நன்றி செலுத்தினார்.

முன்னதாக, ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும், அதை ஏற்றிச்சென்ற அனைத்து வாகனங்களுக்கும்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், இந்த கடும் நெருக்கடியான சூழ்நிலையிலும் எங்கள் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் ஒருநாள் கூட தாமதமில்லாமல் எரிவாயு சிலிண்டர்களை டெலிவரி செய்து வருகின்ற எங்கள் ஊழியர்களும், எங்களை பொறுத்தவரை கடவுள்தான். எனத் தெரிவித்தார்.

அதனால்தான் அந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களது பாதங்களுக்கு பூஜை செய்து நாங்கள் வணங்குகின்றோம் என்றார்.

Tags : #CORONA #CYLINDER #SUPPLY #WORKERS #WORSHIP #OWNER