'கொரோனா' பரவலைத் தடுக்க... 'ஆண்களே' சூப்பர் 'மார்க்கெட்' செல்ல வேண்டும் ஏனென்றால்... 'சர்ச்சையை' ஏற்படுத்தியுள்ள மேயரின் 'கருத்து'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஜப்பானில் ஒசாகா மேயர் ஆண்கள் மட்டுமே பொருட்கள் வாங்க வெளியில் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஜப்பானில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நாடு தழுவிய அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே முதல் வாரம் வரை இந்த அவசரநிலை தொடர உள்ள நிலையில், நாடு முழுவதும் சமூக பரவலை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பானின் ஒசாகா நகரில் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேயர் கூறியுள்ள கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்குச் செல்வது குறித்துப் பேசிய ஒசாகா மேயர் இச்சோரி மட்சுய், "பெண்கள் கடைக்குச் சென்றால் அவர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதே ஆண்கள் சென்றால் இந்த பொருட்கள் வேண்டும் என்று கேட்பார்கள், இருக்கும் இடத்தை காட்டினால் நேராக சென்று வாங்கிவிட்டு வீடு திரும்பி விடுவார்கள். அதனால் மக்களிடையேயான தொடர்பைத் தவிர்க்க ஆண்கள் கடைக்குச் செல்வதே சிறந்தது" எனக் கூறியுள்ளார். ஜப்பான் போன்ற ஒரு நாட்டில் இதுபோன்ற ஒரு வார்த்தை மேயரிடம் இருந்து வருவது மிகவும் வருந்தத்தக்கது என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.