ஏர்போர்ட்ல 4 நண்பர்கள் செஞ்ச வினோத செயல்.. 'நியாயமா இதெல்லாம்' என கேள்வியெழுப்பும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் 4 நண்பர்கள் செய்த வினோத செயல் பல பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | ஒரு பைக்-ல இத்தனை பேரா..வைரலான வீடியோ.. போலீஸ் போட்ட பொளேர் கமெண்ட்..!
பொதுமக்கள் நகைக்கும்படி புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என பலரும் இணையதளங்களில் புதுப்புது வீடியோக்களை பதிவிட்டு வருவதை நாம் பார்த்திருப்போம். இணைய வசதி பெருகிவிட்ட இந்த காலத்தில் இதுபோன்ற வீடியோக்களின் வருகையும் அதிகமாகிவிட்டன. சொல்லப்போனால் இந்த மாதிரியான நகைச்சுவை வீடியோக்களை காணவே பலரும் இணையதளங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாத நகைச்சுவைக்கு எப்போதும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோவில் 4 நண்பர்கள் செய்யும் வினோத செயல் பலரையும் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறது.
வைரல் வீடியோ
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் உள்ள விமான நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பரபரப்பாக இருக்கும் விமான நிலையத்தில் மக்கள் அங்குமிங்கும் நடந்து செல்கிறார்கள். இதனிடையே, தானியங்கி பாதையில் 4 ஆண்கள் அமர்ந்திருப்பதை கண்டு பலரும் அவர்களையே பார்க்க துவங்குகின்றனர். நகரும் அந்த பாதையில் அமர்ந்திருக்கும் அந்த நபர்கள் படகை செலுத்துவது போல, ஆக்ஷன் செய்தபடி சத்தம் எழுப்புகிறார்கள்.
குழுவாக இணைந்து படகை செலுத்தும்போது, ஒன்றுசேர்ந்து சத்தம் எழுப்பியபடி துடுப்பை அசைப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல, விமான நிலையத்தில் இருந்த நகரும் பாதையில் அமர்ந்தபடி அந்த நான்கு பேரும் ஆக்ஷன் செய்ய, அது அங்கிருந்த மக்களை புன்னகைக்க வைத்தது.
இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் "அவர்கள் தவறான திசையில் அமர்ந்திருக்கிறார்கள்" எனவும் இவர்களை பார்த்துக்கொண்டே உங்களது விமானத்தை தவறவிட்டால் என்ன ஆகும் என சிந்தித்துப் பாருங்கள்" எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
விமான நிலையத்தின் நகரும் பாதையில் அமர்ந்தபடி படகை ஓட்டுவது போல, நண்பர்கள் ஆக்ஷன் செய்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Meanwhile at the airport.. 😂 pic.twitter.com/3p5JC0Oqhq
— Buitengebieden (@buitengebieden) May 21, 2022