மனைவிகளை மாற்றிய விவகாரம்.. விஐபிகளை தப்ப வைக்க முயற்சியா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் மனைவிகளை மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரால் மனைவிகளை பணத்திற்காக மாற்றிக் கொள்ளும் கும்பல் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியுலகிற்கு தெரியவந்தது. இந்த விவகாரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்காக 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்கி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த கும்பலை பிடிக்க சைபர் க்ரைம் துணையுடன் போலீசார் களமிறங்கினர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய விபரங்களும் திரட்டப்பட்டன. இந்த குழுவில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் கோவா மாநிலத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருப்போரும், முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் இதில் உறுப்பினராக இருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகார் வந்ததும் 7 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் அடுத்தடுத்து தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முக்கிய பிரமுகர்களை தப்ப வைப்பதற்கான முயற்சியா? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.