"இனி சம்பள விஷயத்தில் இது கட்டாயம்"... 'தனியார் துறை ஊழியர்களுக்காக அதிரடி சட்டம்!'... 'UAE-க்கு குவியும் பாராட்டுக்கள்!!!'...

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Saranya | Sep 25, 2020 01:27 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிகரான சம்பளம் வழங்குவதற்கான சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

UAE Introduces Equal Salary For Men Women In Private Sector

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் துறையில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்குவதற்கான புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலிபா பின் சையது அல் நஹ்யான் பிறப்பித்த உத்தரவில், ஒரே வேலையில் பணிபுரியும் ஆணுக்கும், பெண்ணுக்கும் என்ன சம்பளம் வழங்க வேண்டும் என்பதை மார்க்கெட் நிலவரம்தான் முடிவு செய்ய வேண்டுமெ தவிர பாலினம் அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.

UAE Introduces Equal Salary For Men Women In Private Sector

இதற்காக, அந்நாட்டின் பெடரல் சட்டம் எண் 08 பிரிவு 32-இல் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும்,  இதன் நோக்கமே தனியார் துறையில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதுதான் எனவும் கூறப்பட்டுள்ளது. சம்பளத்தில் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக மனிதவள அமைச்சகம் ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று புதிய உத்தரவை அமல்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், இதன் மூலம் பாலின சமத்துவத்தை உயர்த்தி பிடிப்பதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அந்தஸ்து உயரும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

UAE Introduces Equal Salary For Men Women In Private Sector

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய சட்டத்திற்கு உலக அரங்கில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெண்களின் அதிகாரமயமாதலுக்கு இந்த சட்டம் பேருதவியாக இருக்குமென வெளியுறவுத் துறை அமைச்சர் அன்வர் கர்காஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் உலக பொருளாதார மன்றத்தின் 2020ஆம் ஆண்டு அறிக்கையில், சம்பளத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதில் வளைகுடா நாடுகளிலேயே ஐக்கிய அரபு அமீரகம் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. UAE Introduces Equal Salary For Men Women In Private Sector | Business News.