திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்...! பிரதமர் மோடி தமிழில் டுவிட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவள்ளுவர் தினமான இன்று அந்த மகானை வணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பாரதியார், திருவள்ளுவர் போன்ற தமிழ் அறிஞர்களின் பாடல் வரிகளிலிருந்து அவ்வப்போது மேற்கோள் காட்டி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கல் பண்டிகைகள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், "திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன்" என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.
நேற்று பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் தமிழில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
