‘பேசிட்டு இருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்த கிரிக்கெட் ஜாம்பவான்’.. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 31, 2019 02:45 PM

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் மயங்கி விழுந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IND vs WI: Viv Richards fell ill during a pre match analysis show

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்தியா கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆண்டிகுவா மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டிக்கு முன்னதாக டிவி நேரலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சில மணிநேர சிகிச்சைக்குபின் மீண்டும் அவர் நேரலையில் கலந்துகொண்டார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் அணி முதலில் பௌலிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயனங் அகர்வால் களமிறங்கினர். இதில் ராகுல் 13 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த புஜாராவும் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி (76) மற்றும் மயனங் அகர்வால் (55) கூட்டணி நிதானமாக ஆட ஆரம்பித்தது. முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.

Tags : #WESTINDIES #VIVRICHARDS #ILL #PREMATCH #TEAMINDIA #INDVWI #TEST