‘இவன் இளவட்டமும் கிடையாது’... ‘தனக்குத் தானே பேசிக்கிறான்’... ‘தவானின் விநோத செயலை’... ‘வீடியோ எடுத்து வெளியிட்ட ரோகித்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Sep 21, 2019 10:03 PM

இந்திய வீரர் ஷிகர் தவான், தனக்குத்தானே பேசிக்கொண்டிருப்பது போன்ற வீடியோ ஒன்றினை பதிவுசெய்து ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Rohit Sharma Secretly Records Opening Partner Shikhar Dhawan

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கலக்கி வருபவர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியை ஒட்டி, பெங்களூருக்கு, இந்திய அணி வீரர்கள் பெங்களூருக்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமானத்தில் ஷிகர் தவான், தனக்குத்தானே பேசும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘இல்லை, இல்லை. அவர் என்னிடம் பேசவில்லை! கற்பனை நண்பர் வைத்துக்கொள்ளும் வயதும் கடந்து விட்டது’ என்ற தலைப்புடன் இந்த வீடியோவை ரோகித் சர்மா பதிவிட்டிருந்தார். இதற்கு, ‘அவர் வீடியோ எடுத்தபோது, நான் கவிதை படித்து கொண்டிருந்தேன். நான் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து கொண்டிருந்தேன். அத்தகைய ஆர்வத்துடன் நானும் படித்திருக்கலாம் என்று விரும்புகிறேன்’ என்று ஷிகர் தவான் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #ROHITSHARMA #SHIKHARDHAWAN #CRICKET #BANGALORE #VIDEO #INSTAGRAM