"கொரோனாவுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம்!.. ஆனால் இதையெல்லாம் ஃபாலோ பண்ணனும்!".. நிபந்தனைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 08, 2020 11:58 PM

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முனைப்பில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இதுகுறித்த ஆராய்ச்சிகளும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ICMR advises to use this drugs against covid19 with few conditions

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் எச்.ஐ.வி நோய்க்கான மருந்தாக பயன்படுத்தப்படும்  லோபினாவிர் (Lopinavir) மற்றும் ரிட்டொனாவிர் (Ritonavir)ஆகிய இரண்டு மருந்துகள் இணைந்த கூட்டு மருந்தை கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தலாம் என்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 2002 , 2012-ஆம் ஆண்டுகளில் தாக்கிய வைரஸ் வகையை சார்ந்த நோய்களான SARS COV, MERS COV ஆகிய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காக இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் இந்த மருந்துகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கையூட்டும் வகையில் வந்திருப்பதாகவும், அதனால் இந்த மருந்தை கூட்டு மருந்தாக கோவிட்-19  சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கூட்டு மருந்தை நோய் பாதிப்பு மிதமான நிலையில் இருப்பவர்கள்,  அதாவது ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுவாசிப்பவர்கள், ஆக்ஸிஜன் கரையும் தன்மை 94க்கு கீழ் உள்ளவர்கள், புதிதாக ஏதோ ஓர் உறுப்பு செயலிழந்த கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோருக்கு பயன்படுத்தலாம் என்றும், ஆனால் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு நோயாளியிடம் இருந்து ஒப்புதல் படிவம் பெற வேண்டுமென்றும், நோயாளிகள் சிகிச்சையில் இருக்கும்போது அவர்களை கண்காணித்து அறிகுறிகள் உள்ளவர்கள் பற்றிய முறையான ஆய்வு முடிவுகள் மற்றும் மருந்தின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வேறு நோய்க்கு பயன்படுத்தப்பட்ட மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்துவதால், புதிய மருந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சி நேரத்தையும் செலவையும் குறைக்கலாம் என்றும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியுள்ளது. மேலும் இந்த மருந்து எப்படி செயலாற்றுகிறது என்பதை அறியும் பட்சத்தில் வருங்காலத்தில் கோவிட்-19 சிகிச்சையை வரையறுக்கவும் இது உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.