VIDEO : 'அவங்க' கிட்ட இருந்து யாரும் 'காய்கறி' வாங்காதீங்க... எம்.எல்.ஏ-வின் பேச்சால் 'புதிய' சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 28, 2020 08:49 PM

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அத்தியவாசிய தேவைகளுக்கு அல்லாமல் பொது இடங்களில் நடமாடுவதை அதிகமாக தவிர்த்து வருகின்றனர்.

MLA from BJP party tells not to bring vegetable from Muslims

மக்களுக்கு அன்றாட வாழ்க்கைகளில் பயன்படும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் போன்றவற்றை மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கி வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் முஸ்லீம் மக்கள் நடத்தும் கடைகளில் செல்ல வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கூறியுள்ள தகவல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் திவாரி பேசிய இந்த வீடியோ தற்போது வெளியாகி மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எம்.எல்.ஏவின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த கருத்து குறித்து பேசிய சுரேஷ் திவாரி, தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் பங்கு குறித்து மக்கள் புகாரளித்ததாகவும், அதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் இதனை பரிந்துரை செய்ததாகவும் தற்போது விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறித்து சர்ச்சை கருத்தை பேசியதால் எம்.எல்.ஏவின் கருத்திற்கு நாடு முழுவதும் கண்டன அலைகள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.