'மது' குடிக்க... 'காசு' எல்லாம் தர முடியாது... மறுத்த 'கர்ப்பிணி' மனைவிக்கு... 'மகன்' கண்முன்னே நடந்த 'கொடூரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | May 07, 2020 12:18 AM

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தற்போது மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள மதுக்கடைகள் குறிப்பிட்ட சில விதிகளுடன் இயங்கலாம் என அனுமதியளிக்கப்பட்டது.

Pregnant wife refused money to buy liquor for husband

இந்நிலையில், சுமார் நாற்பது நாள் ஊரடங்கிற்கு பின்னர் மதுக்கடைகள் செயல்பட தொடங்கியுள்ளதால் மது பழக்கம் உள்ளவர்கள் அதிக நேரம் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நேற்று முதல் மதுக்கடைகள் திறந்த நிலையில் முதல் நாளே பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சர்பாதான் பகுதியிலுள்ள படோலி என்னும் கிராமத்தில் வசிக்கும் தீபக் சிங்க் என்பவர், தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் மனைவி பணம் தரமாட்டேன் என மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த தீபக் சிங், மனைவி கர்ப்பிணி என்றும் பாராமல் தனது நான்கு வயது மகன் கண் முன்னே மனைவியை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

மனைவி உயிரிழந்ததும் பயத்தில் தீபக் சிங் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு வந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தீபக் சிங் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியது.