darbar USA others

“எனக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் கெடைக்குமா?”.. ட்விட்டரில் அதிரவைத்த நபர்.. “சிட்டி போலீஸ்” கொடுத்த “மரண மாஸ்” ரிப்ளை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 13, 2020 09:47 AM

மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில், காவல் நிலையத்தின் போன் நம்பரை ட்விட்டரில் கேட்ட இளம் பெண்ணின் போன் நம்பரை இளைஞர் ஒருவர் கேட்ட சம்பவமும், அதற்கு புனே காவல் துறையினரின் பதிலும் வைரலாகியுள்ளது.

man asks unknown girls contact to police in twitter

மகாராஷ்டிராவின் புனே பகுதியில் உள்ளது தனோரி எனும் இடம். இங்குள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண்ணை இளம் பெண் ஒருவர், புனே காவல் நிலையத்தின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கமான புனே சிட்டி போலீஸ் பக்கத்தை டேக் செய்து கேட்டுள்ளார்.

‘அதாவது புனே சிட்டி போலீஸ் தனோரி காவல் நிலையத்தின் தொடர்பு எண் எனக்கு அவசரமாக தேவைப்படுகிறது, கிடைக்குமா?’ என்று அப்பெண் கேட்டுள்ளார். இதற்கு புனே சிட்டி போலீஸ் உட்பட பலரும் காவல் நிலையத்தின் போன் நம்பரை பதிவிட்டனர். ஆனால் ஒரு ட்விட்டர்வாசி மட்டும், புனே சிட்டி போலீஸை டேக் செய்து,‘புனே சிட்டி போலீஸ் எனக்கு அந்த பெண்ணுடைய போன் நம்பர் கிடைக்குமா?’ என்று கேட்டுள்ளார். இதற்கும் பதில் அளித்த புனே சிட்டி போலீஸ்,

‘சார் அந்த பெண்ணின் போன் நம்பரை தெரிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பதால், உங்களுடைய போன் நம்பரைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களுக்கு வந்துவிட்டது. 

நீங்கள் எனக்கு மெசேஜில் வேண்டுமானாலும் அனுப்பலாம். நாங்கள் ஒருவரின் ரகசியங்களை மதிக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளனர். புனே சிட்டி போலீஸின் இந்த பதில் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

Tags : #POLICE #TWEET #PUNE