'தெரியும் இது உங்க வேலைதான்னு'.. 'அம்மா..அப்பா.. உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்'.. இணையத்தை 'தெறிக்கவிட்ட' 9 வயது சிறுமியின் கடிதம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 26, 2019 07:46 PM

மேற்கத்திய நாடுகளில் சிறு குழந்தைகளின் பல் விழுந்தால், அவர்கள் உறங்கும்போது டூத் ஃபெய்ரி என்கிற ஒரு பல் தேவதை வந்து அவர்களின் தலைமாட்டில் ஒரு பவுண்டு வைத்துவிட்டு போகும் என்கிற செவிவழிக் கதை உண்டு.

little girls smart letter to her parents goes viral hit

இதை நம்பியே பல குழந்தைகள் வளரும் நிலையில், 9 வயது சிறுமி ஒருவர், தனது தலைமாட்டுக்கு கீழ் ஒரு பவுண்டினை கண்டுபிடிக்கிறார்.  இதனை அடுத்து பல் தேவதைக்காக ஒரு கடிதம் எழுதத் தொடங்கிவிட்டு, பின்பு அதனை அடித்துவிட்டு, அன்புள்ள அம்மா அப்பா என தொடங்கி ஒரு வைரலான கடிதத்தை எழுதியுள்ளார்.

அதில்,  ‘அன்புள்ள அம்மா, அப்பா.. எனக்குத் தெரியும் இது உங்க வேலைதான் என்று. முதலில் பொய் சொல்றதை நிறுத்துங்கள். ஒரு பவுண்டுக்கு பதிலாக 100 பவுண்டு வைத்திருக்கலாம் நீங்கள் என்பதுதான் எனது சிறிய அட்வைஸ். இப்படிக்கு பொய்யர்களை கண்டுபிடிக்கும் சிறந்த துப்பறிவாளியான உங்களுக்கு பிடித்தமான குழந்தை’ என்று எழுதி இதயம் நெகிழ வைக்கிறார்.

இத்தனை சிறிய வயதில் சிறந்த மொழி ஆளுமையும், புத்திசாலித் தனமும் கொண்டு செயல்படும் சிறுமியின் இந்த செயல் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. சில பெரும் பத்திரிகை நிறுவனங்கள், ‘எப்போது எங்களுடன் இணையப் போகிறீர்கள்’ என்றெல்லாம் கேள்வி கேட்டு இந்த குழந்தையை பாராட்டியுள்ளன.

Tags : #INTELLIGENT #LETTER #LITTLEGIRL #VIRAL