'எப்போமே பெண் குழந்தைகளுக்கு'... 'அப்பா மேல தனி பாசம் தான்'...மனதை உருக வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 21, 2019 11:36 AM

நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வரும் அப்பாவை, ஓடி வந்து கட்டியணைக்கும் குழந்தைகளின் வீடியோ ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Heart Melting video of father and daughter goes viral

வேலை நிமித்தமாக வெளி ஊர்களிலோ, வெளி நாடுகளிலோ இருக்கும் அப்பாக்கள் மற்றும் அவரது குடும்பங்கள் படும் வலி என்பது சாதாரண ஒன்று அல்ல. அதை உணர்ந்தவர்களுக்கு தான் அந்த வலியின் அர்த்தம் புரியும். அவ்வாறு வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருப்பவர்கள் நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வரும் போது, அப்பாக்களுக்கும் அவரது குழந்தைகளுக்கும் உண்டாகும் மகிழ்ச்சி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

அதே போன்ற ஒரு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தந்தை நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு  வருகிறார். அப்போது அவரது மகளும் இரண்டு சிறு வயது மகன்களும் ஓடி வந்து கட்டியணைக்கிறார்கள். மகள் மட்டும் தந்தையை விடாமல் கட்டியணைத்தவாறே நிற்கிறார். இது காண்போரை உருக வைப்பதாக உள்ளது. மகள்களுக்கு எப்போதுமே அப்பாக்கள் மீது தனி பாசம் தான் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.

Tags : #TWITTER #LOVE #FATHER LOVE #KIDS