"மணமகன் தேவை" என நாளிதழில் வந்த விளம்பரம்.. கடைசி லைன்'ல ஐடி ஊழியர் பத்தி இருந்த விஷயம்.. "ஊரே இன்னைக்கி இத பத்தி தான் பேசுது"
முகப்பு > செய்திகள் > இந்தியாஇணையத்தில் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான விஷயங்கள் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில், திருமண வரன் தொடர்பாக பத்திரிக்கையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட விஷயம் கூட இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மத்தியில் மிக பெரிய பேசு பொருளாக கூட மாறும்.
அப்படி தற்போது ஒரு திருமண வரன் தொடர்பான விளம்பரம் தான், இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது கருத்துக்களையும் பெற்று வருகிறது.
மணமகன் தேவை என்ற விளம்பரம் ஒன்று, நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் வயது, படிப்பு தொடர்பான விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்க, அதன் கீழே எப்படிப்பட்ட மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவலும் இடம் பெற்றுள்ளது. அதில், ஐஏஎஸ், மருத்துவர், தொழிலதிபர் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் மாப்பிள்ளையை எதிர்பார்க்கும் அவர்கள், கடைசி லைனில் ஒரு பரபரப்பு வாக்கியத்தையும் இடம்பெற செய்துள்ளனர்.
அது என்னவென்றால், "சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவு செய்து அழைக்க வேண்டாம்" என்ற வாக்கியம் தான் அது. இது தொடர்பான நாளிதழின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட, பலரும் இது குறித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இப்படி போனால் ஐடி ஊழியர்கள் வரும் காலத்தில் எப்படி பெண் தேடுவார்கள் என்பது போன்ற கருத்துகளையும் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.
பெண்ணுக்கு ஐடி ஊழியர் வேண்டாம் என்பது தொடர்பான மணமகன் தேவை விளம்பரம், இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
