மேடையில் நண்பர்கள் கொடுத்த பரிசு.. தேம்பி அழ தொடங்கிய மாப்பிள்ளை.. "பாக்குற நமக்கே மனசு கலங்கி போய்டுச்சு"

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Sep 19, 2022 02:16 PM

திருமணம் என்றாலே மிக மிக சிறப்பான ஒரு நாளாக தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. மணமக்கள் இருவரும் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடியாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.

Friends gift groom father cut out in marriage

அப்படி ஒரு சூழ்நிலையில், மணமகன் ஒருவருக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு தொடர்பான செய்தி, தற்போது இணையவாசிகள் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில், திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

உதாரணத்திற்கு திருமணத்திற்காக எடுக்கப்படும் போட்டோஷூட், வித விதமாக அச்சடிக்கப்படும் புதுமையை கலந்த திருமண அழைப்பிதழ்கள், திருமண மேடையில் மணமக்களின் நடனம், நண்பர்கள் அளிக்கும் பரிசு என திருமணம் தொடர்பான ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறும்.

Friends gift groom father cut out in marriage

அந்த வகையில், தற்போது திருமண மேடையில், மாப்பிள்ளைக்கு அவரது நண்பர்கள் கொடுத்த பரிசு தான், பலரையும் மனம் உருக வைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கோட்டைமேடு பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவழகன் மற்றும் மதி ஆகிய இருவருக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் தான், மாப்பிள்ளை உட்பட அனைவரையும் நெகிழ வைக்கக் கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறி இருந்தது. அறிவழகனின் தந்தை உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

Friends gift groom father cut out in marriage

அப்படி இருக்கையில், நண்பரின் திருமணத்திற்கு உணர்ச்சிவசப்படக் கூடிய பரிசு ஒன்றை இளைஞர்கள் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அறிவழகனின் தந்தையின் உருவ படத்தை பேனர் வடிவில் சிறிய கட் அவுட் போல பிரிண்ட் செய்து பரிசாக அளித்தனர். இதனைக் கண்டதும் மேடையிலேயே கண்ணீர் விட தொடங்கிய அறிவழகன், பரிசளித்த நண்பரையும் கட்டித் தழுவிய படி அழுது கொண்டே இருந்தார்.

Friends gift groom father cut out in marriage

இதனைக் கண்டதும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் கலங்கி போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி, பலரையும் நெகிழ வைத்து வருகிறது.

Tags : #MARRIAGE #GROOM #FATHER #EMOTIONAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Friends gift groom father cut out in marriage | Tamil Nadu News.