PUDUCHERRY : ‘துறவறம்’ போகும் 22 வயது புதுச்சேரி பெண்.. மேளதாளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற உறவினர்கள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரியில் வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சாந்தி லால் ஜெயின். இவருடைய மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர்களில் இளைய மகள் 22 வயதான சலோனி ஜெயின். பயோடெக் இன்ஜினியரிங் படித்த இவர் ஆன்ம வாழ்க்கையை மேற்கொள்ளும் விதமாக துறவறம் மேற்கொள்ளக்கூடிய முடிவை எடுத்திருக்கிறார். இது குறித்து தன்னுடைய பெற்றோர்களிடம் இவர் தெரிவித்தபோது அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து வரும் 4-ஆம் தேதி பெங்களூரில் உள்ள பாஸ்வசுசீல்தார் கோயிலில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் சுவசர் மகாராஜ் முன்னிலையில், தீட்சை பெற்று துறவறம் செல்கிறார்.
இதன் ஒரு அங்கமாக அவரை அவரது உறவினர்கள் சாரட் வண்டியில் வைத்து, மேளதாளம் முழங்க ஊர்வலம் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் பஸ்வநாத் ஜெயின் கோயில், சித்தன்குடியில் உள்ள சித்தன்நாத் ஜெயின் திகாம்பர் ஜெயின் ஆகிய தலங்களுக்கு சென்று சலோனி ஜெயின் வழிபாடு செய்தார். இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சலோன் ஜெயின், தான் டான்ஸ் கோரியோகிராபராக ஆசைப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடியில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் சுவசர்ஜீ மகாராஜ் தலைமையில் நடந்த முகாமில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அங்கு 50 நாட்கள் நடந்த சாது ஜீவன் முகாமில் கலந்து கொண்டதாகவும், அதில் ரிஷிகளின் வழியில் ஆத்மாவை உணர்ந்து வாழக்கூடிய, ஆத்ம நிலையை அடையக்கூடிய வாழ்வை வாழ்வதற்கு உண்டான அடிப்படை பயிற்சிகள் கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து துறவறம் மேற்கொள்ளக்கூடிய தம் முடிவை தம்முடைய பெற்றோரிடம் குறிப்பிட்டதாகவும் அவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தான் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Also Read | “பொழைச்சுட்டோம்”.. விபத்தான விமானத்தின் முன்பு செல்ஃபி .. உலக லெவலில் வைரலான தம்பதி..