ரூ.786 கோடி நஷ்டம் ? அம்மா உணவகம் மூடப்படுகிறதா..? சென்னை மேயர் பிரியா சொல்வது என்ன.?
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் முதல்வரும், அகில இந்திய அதிமுக கட்சி பொதுச் செயலாளராக அக்கட்சியை வழிநடத்தியவருமான ஜெ.ஜெயலலிதா தன்னுடைய ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு தாங்கள் தொடங்கிய மக்களுக்கான மலிவு விலை உணவகத்துக்கு அம்மா உணவகம் என்று பெயரிட்டார்.

Also Read | “பொழைச்சுட்டோம்”.. விபத்தான விமானத்தின் முன்பு செல்ஃபி .. உலக லெவலில் வைரலான தம்பதி..
தமிழ்நாடு முழுவதும் இன்றும் இயங்கி வரும் இந்த உணவகம் குறித்து பொதுமக்கள் பலரும் பல வேளைகளில், அன்று முதல் இன்று வரை ஜெயலலிதாவுக்கு தங்களுடைய நன்றியையும் நெகிழ்ச்சியையும் தெரிவித்த வண்ணமே இருக்கின்றனர். இந்நிலையில், விரலில் சென்னையில் மாநகராட்சி மன்ற கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா முதற்கட்டமாக கொடுங்கையூர் குப்பை கிடங்கை சீர்திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதேபோல் மாநகராட்சி பொதுக்குழு கணக்காளர் தனசேகரன் சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்கள் ரூபாய் 786 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், நாள் ஒன்றுக்கு வெறும் 250 ரூபாய் மட்டுமே ஈட்டக்கூடிய அம்மா உணவகங்கள் கூட இயங்கி வருவதாகவும், குறிப்பிட்டு அதுபோன்ற அம்மா உணவகங்கள் மூடப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மாநகராட்சி மேயர் பிரியா, அம்மா உணவகங்கள் மூடப்படாது என்றும் அம்மா உணவகங்களில் பிரச்சனை இருந்தால் அவை சரி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பேசியவர் எப்போதும் போல அம்மா உணவகங்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
