தலைக்கு ஏறிய போதை.. மலை உச்சியில் 'செல்பி'.. இளம் தம்பதிக்கு 'நேர்ந்த' விபரீதம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Nov 01, 2019 12:27 PM
கேரளாவை சேர்ந்த விஸ்வநாத்(29)-மீனாட்சி(30) இருவரும் ஐடி துறை சார்ந்த படிப்பை படித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சேர்ந்தாற்போல இருவருக்கும் அமெரிக்காவில் வேலை கிடைக்க, இருவரும் அமெரிக்கா சென்று அங்கு வேலைபார்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையே சமீபத்தில் சுற்றுலா சென்ற இவர்கள் கலிபோர்னியாவில் உள்ள யோசிமிட்டே தேசிய பூங்காவுக்கு சென்று அங்குள்ள 800 அடியுயர மலை உச்சியில் ஏறியுள்ளனர். மலையின் உச்சியில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக இருவரும் தவறி பள்ளத்தில் விழுந்தனர்.
பள்ளத்தில் விழுந்த தம்பதியரை மீட்புப்படையினர் மீட்டு உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் தம்பதியர் இருவரும் மது அருந்தியது தெரியவந்தது. செல்பி எடுக்க ஆசைப்பட்டு தம்பதியர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags : #KERALA
