“இருதய அடைப்பால் தவித்த அணில்”.. இதயத்தை நெகிழ வைக்கும் இளைஞர்களின் செயல்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | May 05, 2019 01:45 PM

கார்டியோ பூமோனேரி ரிஸ்க்யூசேஷன் எனப்படும் இருதய அடைப்புக்கான முதலுதவி சிகிச்சை மருத்துவ வரலாற்றிலேயே மிக முக்கியமான பதம் அல்லது சொல் என்று சொல்லலாம். பலரது அகால மரணத்துக்கு காரணமாக அமையும் மாரடைப்பு அல்லது இருதய நோய் என்பது ஒருவருக்கு மூப்பு காலத்தில் பல நேரங்களில் வரும்.

men gave a squirrel CPR - heart melting video goes viral

ஒரு மனிதரின் உடல்திறனைப் பொருத்து, அவரால் எவ்வளவு அட்டாக்குகளை கடந்தும் உயிர்வாழ முடியும் என்பது நிர்ணயமாகிறது. அப்படிப்பட்ட இந்த திடீர் நோய்க்குறிக்கான மாற்று எதிர்ப்புச் சக்தி உதவியாக சிபிஆர் முதலுதவி சிகிச்சை பயன்பட்டது. இதன் மூலமாக மரணத்தின் இறுதி தருவாயில் இருந்து பலரும் மீட்கப்பட்டுள்ள அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆனால் சமீபத்தில் ஒருவர் இதையே ஒரு அணிலுக்கு செய்து, அந்த அணிலின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. பூவுலகில் மிகவும் விசித்திரமான பிராணிகளுள் ஒன்றான அணில் மரத்துக்கு மரம் தாவி, சிறிய பழங்களை கொண்டு கொழித்து வளரும் தன்மையுடையது.

சிலர் இதனைச் செல்லப் பிராணியாகவும் வளர்ப்பதுண்டு. ஆனால் இந்த வீடியோவில் அணில் ஒன்று, மின் கம்பியில் பட்டு திடீரென மாரடைப்பால் தவித்துள்ளது. அதனைக் கண்ட இளைஞர்கள் சிலர், சாலையில் தம் பைக் மீது வைத்து அந்த அணிலுக்கும் மெடிக்கல் சிறப்பம்சமான சிபிஆர் முறையில் முதலுதவி செய்து பிழைக்க வைக்க முயற்சிக்கின்றனர். இதற்கென அந்த பெண் அணிலின் இருதய பகுதிக்கு நேராக ஒரு விரலால் அழுத்தி கொடுக்கின்றனர்.

சிறிது நேரத்தில் அந்த அணில் வாய் வழியாக மூச்சுவிடுகிறது. பின்னர் மெல்ல மெல்ல மூச்சுவிடத்தொடங்கி, உயிரியக்கம் பெற்று நிலத்தில் தத்தித் தாவி ஓடுகிறது. நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #SQUIRREL #CPR #LIFE #SAVE