'பெண்ணை கொல்ல 'மனித வெடிகுண்டாக' மாறிய நபர்'...அதிரவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 27, 2019 10:58 AM

மனித வெடிகுண்டாக மாறி, பக்கத்து வீட்டு பெண்ணை ஒருவர் கொலை செய்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Two people were killed in an explosion at her house in Wayanad

கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி அருகே உள்ள நாய்க்கட்டி பகுதியில் வசித்து வந்தவர் பென்னி. இவரது பக்கத்து வீட்டில் அமினா என்ற பெண், தமது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.சம்பவத்தன்று அமினா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பென்னி,அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வீட்டினுள் சென்ற பென்னி திடீரென,தமது உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிப்பொருட்களை அமினா அருகில் சென்று வெடிக்க செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்த கோர சம்பவத்தில் அமினாவும், பென்னியும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமினாவின் கணவர் நாசர் தொழுகைக்கு சென்றிருந்ததாலும், அவரின் குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு இருந்ததாலும்,இருவரும் உயிர் தப்பினர்.வீட்டினுள் வெடி சத்தம் கேட்கவே பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பென்னி வெடிப்பதற்கு பயன்படுத்திய வெடிபொருட்கள்,பன்றிகளை கொல்ல பயன்படுத்தப்படும் வெடி பொருட்களாகும்.இதனிடையே பென்னி வீட்டிலிருந்து ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அமினா வீட்டுக்குள் பென்னி நுழைந்தது ஏன்? தானும் உயிரிழந்து, பக்கத்துவீட்டு பெண்ணான அமினாவையும் கொன்றது ஏன்? என்பன குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் வயநாடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #ATTACKED #WAYANAD #EXPLOSION #SULTHAN BATHERI