எத்தனை வருஷ ப்ராக்டிஸ்...! 'ஒரே டைம்ல 2 கையாலையும் எழுதுறாங்க...' 'அத தாண்டி இன்னொரு விஷயம் பண்றாங்க, அதான் ஹைலைட்...' - விடாமுயற்சி தந்த வெற்றி...
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் வசிக்கும் சிறுமி ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும், வெவ்வேறு மொழிகளில் எழுதி அசத்துகிறார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் வசிக்கும் 16 வயது மாணவியான ஆதி ஸ்வரூபா என்பவர், ஒரே நேரத்தில் இரு கைகளாலும் இரு வேறுவேறு மொழிகளில் எழுதுகிறார். ஒரு கையில் ஆங்கிலத்திலும், மற்றொரு கையில் கன்னடத்திலும் எழுதும் திறமை அவருக்கு உள்ளது. இரு கைகளாலும் தனித்தனியாக எழுதும் நேரத்திலும் அவர் ஒரே ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 45 வார்த்தைகளை எழுத முடிகிறது என்பது ஆச்சரியப்பட வைக்கக்கூடிய சிறப்பம்சம் ஆகும்.
இதற்காக, அந்த சிறுமி சிறுவயது முதலே தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். விடாமுயற்சியும், தீவிர பயிற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பதற்கு இந்த மாணவி சிறந்த உதாரணமாக உள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் மிமிக்ரி, ஓவியம், பாட்டு என அசத்துகிறார். இரு கைகளிலும் தனித்தனியாக எழுதும் போது மூளை இன்னும் சிறப்பாக இயங்கும் என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஒன்றரை வயது முதல் இவருக்கு இதுதொடர்பாக பயிற்சி அளிக்கப்படுவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். தங்கள் மகளின் கடின உழைப்பால்தான் இந்த நிலையை அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர். மாணவியின் திறமை தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
