'ஃபிரண்டு நோ சொன்னா அதான்'... 'அவங்க அம்மாவ பழிவாங்க'... 'சென்னையில் பள்ளி மாணவன் செய்த பகீர் காரியம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தோழியுடைய தாயின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க வேண்டி மாணவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்துவரும் 40 வயது பெண் தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று போலியாக தொடங்கப்பட்டு, அதில் தனது புகைப்படம் ஆபாசமாக பதிவிடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஐபி முகவரியை வைத்து அதை செய்தது ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ஒரு 12ஆம் வகுப்பு மாணவர்தான் என்பதை உறுதி செய்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே பள்ளியில் படித்து வந்த தொழிலதிபரின் மகளும், அந்த மாணவரும் நட்பாக பழகி வந்ததும், திடீரென அவர் காதலிப்பதாக கூற மாணவி அவருடன் பேசுவதை குறைத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவியின் தாய்தான் அதற்கு காரணம் என நினைத்து அவரை பழிவாங்கவே அதுபோல செய்ததாகவும் விசாரணையில் அந்த மாணவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்
