"மாப்பிள்ளையை பார்த்ததும்.. கல்லூரி மாணவி சொன்ன பதில்!"... ’மறுநாள் இரவே நடந்த ’அந்த கொடூர சம்பவம்!'.. அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ திருமண வீட்டார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே கல்லூரி மாணவி ஒருவர், திருமணத்துக்காக தனக்கு ஏற்பாடு செய்த மாப்பிள்ளை பிடிக்காததால், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கிடுகிடுக்க வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்து புதூர்மேடை சேர்ந்த 55 வயதான விவசாயி சாமிநாதனின் இரண்டு மகளுள் ஒருவரான 22 வயது கல்பனா, அங்குள்ள தனியார் கல்லூரியில், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இவரை நேற்று முன்தினம் மாலை 43 வயது மதிக்கத்தக்க வங்கியில் பணியாற்றும் மாப்பிள்ளை ஒருவர், பெண் பார்க்க வந்துள்ளார். மணப்பெண் கல்பனாவை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால், வரதட்சணை வேண்டாம் என மாப்பிள்ளை தரப்பினர் கூறி விட்டனர். ஆனால் கல்பனாவோ மாப்பிள்ளையின் வயது அதிகம் என்பதால், மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என கூறியதாகவும், அதே சமயம் கல்பனாவின் பெற்றோர் அந்த மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தியதால் வாக்குவாதம் எழுந்ததாகவும் தெரிகிறது.
இதனால் மனவேதனையடைந்த கல்பனா, அன்றிரவே பிளேடால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்க, உடனடியாக அவரை மீட்டு வேலூர், சி.எம்.சி., மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனாலும், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து லத்தேரி போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

மற்ற செய்திகள்
