'காணாமல்' போன 18 வயது 'இளம்பெண்'!.. கண்டுபிடிக்க உதவிய ‘வலது கை டாட்டூவில் இருந்த மெசேஜ்!’
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் காணாமல் போன 18 வயது இளம் பெண் ஒருவர், நள்ளிரவில் போலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி ரொரன்ரோ போலீஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, alana joyner என்கிற 18 வயது இளம் பெண் தான் வசித்துவந்த பகுதியில் இருந்து கடந்த 24 -ஆம் தேதி காணாமல் போனதை அடுத்து அவரை போலீஸார் தேடி வந்தனர்.
அதுமட்டுமல்லாமல், அவருடைய அடையாளமாக 5 அடி , 2 அங்குலம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்ட போலீஸார், அப்பெண்ணின் வலது கையில் இருந்த ‘with struggle comes’ என்று குத்தப்பட்டிருந்த டாட்டூ பற்றியும் தெரிவித்திருந்தனர்.
அதை வைத்து அவரை பொதுமக்களின் உதவியுடன் நள்ளிரவு 2.25 மணி அளவில் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சில சமயம் எதேச்சையாக செய்யும் விஷயங்கள் ஆபத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற உதவும் என்பதற்கு சாட்சியாய் இந்த டாட்டூ விஷயம் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.