'கைகளைக் கட்டிக்கொண்டு தற்கொலையா?'... 'மாயமாவதற்கு முன் பகிர்ந்த பெண்ணின் புகைப்படம்'... 'விலகாத மர்மத்தால் கலங்கி நிற்கும் குடும்பம்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள மறுகால்தலைவிளை என்ற ஊரை சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய மகன் சோபியான். பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ள சோபியான் சம்பவத்தன்று அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளம்பெண் ஒருவருடைய புகைப்படத்தை பகிர்ந்ததாகவும், அதைப் பார்த்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் சோபியான் வீட்டுக்கே வந்து தகராறு செய்து, அவரை மிரட்டி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சோபியான் திடீரென மாயமாக உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால், எப்படி அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவரை அடித்து கொலை செய்து விட்டு தொங்க விட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அந்தப் பெண் வீட்டாரும் விசாரணை வளையத்திற்குள் வருவதால் காதல் விவகாரத்தால் நடந்த கொலையா இது எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
