'அவர் என்னை கர்ப்பமாக்கியது உங்களுக்கு தெரியும்.. உங்க மருமகளா வரணும்னுதான் விரும்புறேன்!'.. தற்கொலைக்கு முன் காதலனிடமும், காதலன் தாயாரிடமும் போனில் கெஞ்சிய இளம்பெண்.. உருகவைத்த ஆடியோ.. கலங்கவைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் திருமணம் செய்துகொள்ள தன்னுடைய காதலன் மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் காதலன் மற்றும் வருங்கால மாமியாரிடம் அப்பெண் கெஞ்சிய ஆடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ராம்ஸி என்கிற இளம்பெண் கடந்த வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது இந்தப் பெண் அவருடைய காதலர் என்று அறியப்படும் பல்லிமுக்கு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவரிடமும் அவருடைய வருங்கால மாமியாரிடமும் போனில் கண் கலங்கி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம் பெண்ணின் தற்கொலை தொடர்பாக ஹரிஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில், “நான் என்ன தவறு செய்ய செய்தேன் ஹரிஷ்.? எதற்காக நான் இத்தனை சிரமப்பட வேண்டும்? நீங்கள் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தீர்கள்.. இந்த சமயத்தில் நான் எப்படி அமைதி காக்க முடியும்? எனக்கு இரண்ரே இரண்டு விருப்பங்கள்தான் உள்ளன. ஒன்று நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள், இல்லையேல் நான் வாழ விரும்பவில்லை” என்று அழுதுகொண்டே கூறுகிறார். ஆனால் அந்தப் பெண்ணின் பேச்சுக்கு மனமிறங்காமல் அலட்சியமாக சரி என்று பதில் சொல்லி விட்டு மறுநாள் 12 மணி வரை சிந்திக்க அவர் கொடுக்கும்படி ஹரிஷ் சொல்கிறார்.
இதனிடையே ராம்ஸி ஹரிஷின் தாயாரிடமும் போனில் உரையாடுகிறார். அப்போது ஹரிஷின் தாய், “இது ஒரு நல்ல முடிவு. நீ ஒரு நல்ல பையனை தேடி திருமணம் செய்து, நல்ல குடும்பத்தில் வாழ்ந்து முன்னேற வேண்டும். உன் மனதை இறுக்கமாக்கிக்கொள் . ஹரிஷின் அப்பா உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஆகையால் நீ உன் பெற்றோர் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்வது நல்லது. இந்த சூழ்நிலையைப் பொறுத்தவரை நான் இவ்வளவு தான் சொல்ல முடியும். அத்துடன் நீ அழகாக இருக்கிறாய். நல்ல வேலை இருக்கிறது. உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது” என்று சொல்கிறார். ஆனால் ராம்ஸியோ, “நான் வேறொரு நபருடன் வாழ விரும்பவில்லை. உங்கள் மருமகள் ஆகவே வர விரும்புகிறேன். என்னுடன் அன்போடு நெருங்கி வந்த ஹரிஷ் என்னுடன் பலகாலம் இருந்தார் என்பதையும் என்னை கர்ப்பம் ஆக்கினார் என்பதும் உங்களுக்கு தெரியும். அப்படியிருக்க நீங்கள் எப்படி என்னிடம் இப்படி பேசுகிறீர்கள்? ஏன் எனக்கு வளைகாப்பு நடத்தினீர்கள்?” என்று கேட்க, ஹரிஷின் தாயார், “பரவாயில்லை. அவன் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கண்டிப்பாக கூறுகிறார்.
மீண்டும் பேசிய ராம்ஸி, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததுமே ஹரிஷிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள கூறியதாகவும், அப்போது தான் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று ஹரிஷ் வற்புறுத்தியதாகவும், அவர் சொந்தமாக தொழில் தொடங்கிய பின்னரே ஒரு குடும்பத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று அவர் கூறியதை அடுத்து, தான் கருவை கலைத்துவிட்டு, ஹரிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக பேசிய ராம்ஸி , “ஆனால் நீங்கள் எனக்கு தேவைப்படும் போது என்னை பயன்படுத்தி விட்டு, இப்போது வேண்டாம் என்று சொல்கிறீர்கள். எனக்கு ஏதேனும் நேர்ந்தால் என் உடலை பார்க்க கூட வர வேண்டாம்” என்று ஹரிஷிடம் கூறிவிட்டு ராம்ஸி போனை துண்டிக்கிறார்.

மற்ற செய்திகள்
