'அறந்தாங்கி சிறுமியை கொன்ற கைதி...' 'போலீசாரிடம் இருந்து தப்பியோட்டம்...' 'தப்பித்த சில மணி நேரத்திலேயே...' - பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தை உலுக்கிய அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான கொலையாளி ராஜா போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் தப்பி ஓடிய சில மணி நேரத்தில் போலீசார் வளைத்து பிடித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொடூரமாக சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றார். இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று குற்றவாளி ராஜா போலீசாரிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், நைசாக கைவிலங்கை உருவிக் கொண்டு தெறித்து ஓடியுள்ளார். தப்பியோடிய ராஜாவை ஆறு பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி தப்பியோடிய சில மணி நேரங்களில் மீண்டும் வளைத்து பிடித்து விட்டனர். இந்த சம்பவம் மீண்டும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
