அடப்பாவிகளா...! இங்கேயுமா...? 'கொரோனா வார்டில் 15 வயசு சிறுமியை...' 'பாத் ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்...' - பாலியல் வன்கொடுமை செய்த செக்யூரிட்டி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்த 15 வயது சிறுமியை பாதுகாப்பு காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தேக்கநிலையில் இருக்கும் சூழலிலும் சில கொடூர சம்பவங்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
கடந்த ஜூலை 8 ஆம் தேதி 15 வயது சிறுமி ஒருவர், பட்னாவின் பார் ரயில் நிலையத்தில் தனியே சுற்றித்திருந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் குழந்தைகள் நலவாரியத்திடம் ஒப்படைத்துள்ளார், அதையடுத்து சிறுமிக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவு வரும் வரை சிறுமி பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (பி.எம்.சி.எச்) கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தாங்க வைக்கப்பட்டிருந்தார்.
அன்று இரவு, கொரோனா வார்டில் இரவு பாதுகாப்பு ஊழியராக பணிபுரிந்த 40 வயதான மகேஷ் பிரசாத் 15 வயது சிறுமியை குளியலறையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். பயத்தின் உச்சத்தில் இருந்த சிறுமி இதுகுறித்து யாரிடமும் சொல்லவில்லை.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று (15.07.2020) மீட்கப்பட்ட சிறுமியை காண சைல்ட் ஹெல்ப்லைன் உறுப்பினர்கள் வந்துள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடூர செயலை அவர்களிடம் கூறி அழுதுள்ளார். சிறுமி சொல்வதை கேட்டு அதிர்ந்த சைல்ட் ஹெல்ப்லைன் அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாட்னா மஹிலா காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்த்தி ஜெய்ஸ்வால் தெரிவித்தார். அடுத்தகட்டமாக சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
