“அக்கா லைவ் வீடியோ கால் பேசிட்டே இருந்தா... திடீர்னு கட் ஆச்சு!”.. மறுமணம் செய்யவிருந்த இளம் பெண்.. நேரில் சென்ற தங்கை.. வீட்டில் கண்ட அதிர்ச்சி காட்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிடா மஸ்ரூர் சௌத்ரி என்கிற இளம் பெண். திருமணமாகி விவாகரத்தான ரிடா ஹபில் என்கிற வேறு ஒரு ஆணை விரும்பியுள்ளார். அந்த நபருடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அவருடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
![rida masroor chaudhary divorced girl killed by new boyfriend haryana rida masroor chaudhary divorced girl killed by new boyfriend haryana](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/rida-masroor-chaudhary-divorced-girl-killed-by-new-boyfriend-haryana.jpg)
நேற்று தனது சகோதரி டரன்னம் என்பவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென ரிடாவின் வீடியோ கால் அழைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, பதற்றமான தரன்னம், தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு தனது சகோதரி ரிடாவின் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ரிடா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவரது சகோதரி தரன்னம், போலீஸாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீஸார், ரிடாவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரித்தனர்.
விசாரணையில், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்த ரிடா, அந்த உண்மையைச் சொல்லி ஹபிப் என்பவரை மணம் செய்துகொள்வதாக இருந்த நிலையில், ஹபிப் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை ரிடாவிடம் இருந்து மறைத்து ரிடாவுக்கு தெரியவர, இதுபற்றி கேட்ட ரிடாவுடன் வாக்குவாதம் செய்த ஹபிப் அவரைக் கொன்றுவிட்டதாகத் தெரிகிறது. மேலும் தப்பியோடி தலைமறைவான ஹபிப்பை போலீஸார் தேடி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)