'15 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர்...' 'கருவை எடுத்திட்டு ரெண்டு பேருமா காருல போய்...' இதுக்கு யார் காரணம்...? - சிசிடிவி பார்த்து ஷாக்...!
முகப்பு > செய்திகள் > இந்தியா15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞரையும், கருக்கலைப்பு நடத்திய 59 வயது மருத்துவரையும் அகமதாபாத் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் மணிநகர் பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஷா (59) கடந்த 29 ஆண்டுகளாக வத்வா ஜி.ஐ.டி.சி பகுதியில் 'கெவல் மெடிகேர் சென்டர்' என்ற கிளிக் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 6-ம் தேதி, கருக்கலைப்பு செய்ய 15 வயது சிறுமி ஒருவர் அவரது கிளினிக்கிற்கு வந்துள்ளார். இந்திய சட்டத்தின் படி கருக்கலைப்பு என்பது ஒரு குற்ற செயலாக கருதப்படும் சூழலில், மருத்துவர் ஷா கருக்கலைப்பு செய்ய ஒத்துக்கொண்டுள்ளார்.
மேலும் 5 மாத கர்ப்பமாக உள்ள அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்து, குழந்தை கருவை மருத்துவரே வெள்ளை ஹூண்டாய் சாண்ட்ரோ காரில் வீட்டிற்கு திரும்பிச் செல்லும்போது மணிநகர் பகுதியில் உள்ள அவ்கர் ஹால் அருகே ஒரு குப்பை இடத்தை ரகசியமாக வீசினார். மேலும் மைனர் சிறுமியின் கர்ப்பத்தை கலைத்ததற்காக ரூ .15,000 வசூலித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குழந்தை கருவை ரோட்டில் வீசி சென்றதற்காக காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தது. பின்னர், விசாரணையின் போது தான் சி.சி.டி.வி ஆதாரங்களை கொண்டு, கடந்த சனிக்கிழமை மருத்துவரை கைது செய்ததை பதிவு செய்தனர்.
மேலும் மருத்துவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 318 (ஒரு குழந்தையின் இறந்த உடலை ரகசியமாக புதைத்தல் அல்லது அவர்களின் பிறப்பை மறைக்க வேண்டுமென்றே அகற்றுவது) கீழ் அவருக்கு எதிராக ஒரு குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் சிறுமியை கண்டறிந்த போலீசார், சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சுனில் சர்காராவை (19) கைது செய்தனர். சர்காரா மீது கற்பழிப்பு மற்றும் போக்ஸோ சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
