"தும்முனாலே கொரோனா தானா..." "சமூக விரோதிய பாக்குற மாதிரி பாக்குறாங்க..." "காலம் எப்படி மாறிவிட்டது..." 'அஸ்வினின்' வைரல் 'ட்வீட்'...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Feb 02, 2020 10:28 AM

விமானத்தில் பறக்கும் போது தெரியாமல் தும்மல் வந்து விட்டால் , உடனே  நம் மீது விழும் சக பயணிகளின் பார்வை சமூக விரோதியை போல் உணர வைப்பதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

If you Sneezing community sees as the enemy-Ashwin

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 21 நாடுகளில் பரவியுள்ளது. பல்வேறு நாடுகளில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவிலிருந்து யார் தாயகம் திரும்பினாலும் மக்கள் மிரட்சியடையும் நிலையில் உள்ளனர். சமீபத்தில் ஆந்திர விமான நிலையத்தில் வந்திறங்கிய சீனர்களைக் கண்டு டாக்ஸி ஓட்டுனர்கள் தெறித்து ஓடிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

தற்போது விமானங்களில் பயணிப்போர் அனைவரும் ஒரு பயத்துடனேயே தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விமானங்களில் பயணிப்போரின் நிலைகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நேரம் மிகவும் மாறிவிட்டது, நீங்கள் தும்மும்போது அல்லது இருமும்போது, விமானத்தில் உள்ள அனைவரும் உங்களை பார்க்கும் விதம் உங்களுக்கு ஒரு சமூக விரோதியை போன்ற  தோற்றத்தை தருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

 

Tags : #ASHWIN #VIRAL TWEET #ANTISOCIAL LOOK #SNEEZING #CORONA